அமெரிக்காவைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் இணைந்து உடற் பயிற்சி செய்யும்போதே மின்சாரத்தை உற்பத்தி செய்யும் புதிய மேசை ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.
தற்போது வேலைப் பழுக்களுக்கு பலருக்கும் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை. இதற்கு தீர்வாகவே இந்த மேசை உருவாக்கப்பட்டுள்ளது.
அலுவலக மேசை போன்று பயன்படுத்தி அதில் உங்களது வேலைகளை செய்து கொள்ள முடியும். அத்துடன் உடற் பயிற்சியும் செய்யலாம். இதன்போது மினசாரமும் பிறப்பிக்கப்படுகின்றது.
நிமிடத்துக்கு 100 வோல்ட் மின்சாரத்தை பிறக்கும் இந்த சைக்களிள் மேசையை பயன்படுத்தி லெப்டொப், மொபைல் போன் போன்றவற்று சார்ஜ் செய்துகொள்ள முடியும். நேரம் விரயமாவது தவிர்க்கப்படுகின்றது. இது மட்டுமன்றி இந்த சாதனம் மூலம் பல்வேறு பொருட்களை அரைக்கவும் நிமிடத்துக்கு 5 கலன் தண்ணீரை பம் செய்யவும் முடியும்.
ஒரே நேரத்தில் பல்வேறு நன்மைகள பயக்கும் இந்த மேசைக்கு பெடல் பவர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை மேலதிக நேரத்தில் கடந்த 5 வருடங்களாக முயற்சி செய்த ஸ்டீவ் பிளட் மற்றும் அண்டி வெகின் என்ற இரு இணை பிரியா நண்பர்கள் உருவாக்கியுள்ளனர்.
சைக்கிள் தொழில்நுட்பத்தில் கையினால் உருவாக்கப்படும் இந்த பெடல் பவர் மேசையின் விலை 2,400 அமெரிக்க டொலர்களாக (சுமார் 3 இலட்சம் ரூபா) நிர்ணயித்து இணையத்தில் விற்பனை செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
