18 பேருடன் பயணித்து சிறிது நேரத்தில் காணாமல் போன நேபாள விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளான நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதோடு விமானத்தில் பயணித்த 18 பேரும் உயிரிழந்திருக்கால் என நம்பப்படுகின்றது.
நேபாள விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று நேற்பிற்பகல் புறப்பட்டு சிறிது நேரத்தில் காணாமல் போயுள்ளது.
நேபாள எயார் லைன்ஸ் விமானம் பிற்பகல் 1.30 மணிக்கு பொஹரா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 15 நிமிடங்களில் காணாமல் போயுள்ளது.
அந்த விமானத்தில் 14 பயணிகளும் குழந்தையொன்றும் 3 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர்.
பயணிகளில் ஒருவர் டென்மார்க்கை சேர்ந்தவராவார்.
இந்நிலையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நேபாளத்தில் உள்ள மலையொன்றில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் விமானத்தின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவமானது நேபாளத்தின் விமானங்களின் பாதுகாப்பு தொடர்பான சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
நேபாளத்தின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பு செய்து வரும் துறையாக சுற்றுலா துறை உள்ள நிலையில் அந்நாடு அண்மைய வருடங்களில் பல விமான விபத்துக்களைச் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment