19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணப் போட்டித் தொடரின் முதற் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. குழு A மற்றும் குழு B இற்கான போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் குழு A இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்று முதலிரு இடங்களைப் பெற்று காலிறுதிச்சுற்றுக்கு தெரிவாகின. இந்தியா அணி பபுவா நியூகினியா அணியை வெற்றி பெற்றதன் மூலம் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றது. பாகிஸ்தான் அணி ஸ்கொட்லன்ட் அணியை வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றது. குழு A இல் ஸ்கொட்லன்ட், பபுவா நியூகினியா அணிகள் முறையே மூன்றாம் நான்காம் இடங்களைப் பெற்றன.
குழு B இல் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு வாய்ப்புக்கள் இருந்த போதும் பங்களாதேஷ் அணியை வெற்றி கொண்ட அவுஸ்திரேலியா அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று காலிறுதிப் போட்டிக்கு தெரிவானது. ஆப்கானிஸ்தான் அணி நபிபியா அணியை வெற்றி கொண்டு 4 புள்ளிகளுடன் காலிறுதிப் போட்டிக்கு தெரிவானது. பங்களாதேஷ் அணி 4 புள்ளிகளைப் பெற்ற போதும் ஓட்ட நிகர சாராசரி வேகத்தின் அடிப்பாடையில் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் முதலிரு இடங்களைப் பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகின. நபிபியா அணி குழு Bஇல் நான்கமிடத்தைப் பெற்றது.
