GuidePedia



மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கும் அயர்லாந்த் கிரிக்கெட் அணிக்கும் இடையில் நடைபெற்ற 20-20 போட்டியில் அயர்லாந்த் அணி 6 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கிறிஸ் கெயில் கூடுதலான 18 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ரிம் முடர்க், கெவின் ஓ பிரையன், அலெக்ஸ் குஸ்சாக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

அயர்லாந்து அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. எட் ஜொய்ஸ் 40 ஓட்டங்களையும், அன்று பொய்ண்டர் 32 ஓட்டங்களையும் பெற்றனர். சாமுவேல் பத்ரி 2 விக்கெட்களை கைப்பற்றினார். எட் ஜொய்ஸ் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இந்தப் போட்டி மேற்கிந்திய தீவுகள் ஜமைக்காவில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
Top