இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவ்ராஜ் சிங் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இன்று பெங்களுரில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் முதற்கட்ட ஐ.பி.எல் ஏலத்தில் பாரிய தொகைக்கு ஏல தொகைக்கு விற்பனையாகியுள்ளனர்.
யுவ்ராஜ் சிங் 29.44 கோடி இலங்கை ரூபாவுக்கும் தினேஷ் கார்த்திக் 26.28 கோடி இலங்கை ரூபாவுக்கு முறையே ரோயல் சலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி டெயார் டெவில்ஸ் ஆகிய அணிகளினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை முன்னாள் டெல்லி டெயார் டெவில்ஸின் அதிரடி வீரர் விரேந்திர செவாக் பஞ்சாப் கிங்ஸ் இலவன் அணியால் 6.73 கோடி இலங்கை ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளார். அதுபோல மும்பை இண்டியன்ஸ் அணியால் மிச்செல் ஜோன்ஸன் 13.67 கோடி இலங்கை ரூபாவுக்கும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் பிரண்டன் மெக்கலம் 6.83 கோடி இலங்கை ரூபாவுக்கும் ஜெக்ஸ் கலீஸ் 11.56 கோடி இலங்கை ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது ஏலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Post a Comment