வட கிழக்கு அமெரிக்காவை வியாழக்கிழமை தாக்கிய பாரிய பனிப் புயல் காரணமாக இதுவரை குறைந்தது 22 பேர் பலியாகியுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து இருளில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பலியானவர்களில் நியூயோர்க் நகரில் பனியை அகற்றும் இயந்திரத்தால் மோதுண்டு உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் உள்ளடங்குகிறார்.
இந்தப் பனிப்புயலால் இங்கு வெள்ளிக்கிழமை 1,00 விமான பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே வாஷிங்டன் டிசியில் 15 அங்குல பனிப்பொழிவும் நியூயோர்க் நகரில் 8 அங்குல பனிப்பொழிவும் இடம்பெற்றுள்ளன.
அதேசமயம் அமெரிக்க மாநிலங்களான கனக்ரிகட்டிலும் மஸாசுஸெட்ஸிலும் கடும் பனிப் பொழிவு இடம்பெற்றுள்ளது.
எனினும் வார இறுதியில் இந்த பனிப் பொழிவு தணிவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு காலநிலைய அவதான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.






Post a Comment