இலங்கை மன்னாரில் 40கிலோ வெடிபொருட்கள் மீட்பு யாழப்பாணத்தில் ஆட்டிலறி எறிகணை மீட்பு திருத்தம்இலங்கை மன்னார் நாச்சிக்குடாவில் 40 கிலோ வரையிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதேநேரம் யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்திலும் ஆட்டிலறி எறிகணையும் மீட்கப்பட்டதாக இலங்கை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
பாஷையூரில் சட்டவிரோத மீன்பிடிக்காக வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 40 கிலோ வெடிமருந்துகளும் இலங்கை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வெடிபொருட்களை வைத்திருந்த பாஷையூர் வாசிகள் இருவர் கைதாவதிலிருந்து தப்பிக்க கடல் மார்க்கமாக நாச்சிக்குடாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாகவும், கடலில் மீன்களை வெடி வைத்துப் பிடிப்பதற்காக இந்த வெடிபொருட்களை வைத்திருந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம்க வெளியிட்டு உள்ளனர்.
யுத்த வலய பகுதிகளினில் கைவிடப்பட்டிருந்த இத்தகைய வெடிபொருட்களை மீட்டு விற்பனை செய்வதில் பல குழுக்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்னியில் இடம்பெற்ற போருக்குப் பின்னர் ஒரே தடவையில் மீட்கப்பட்ட அதிகளவான அபாயகரமான வெடிபொருள் இதுவென அறிவிக்கப்பட்டுள்ளது.
மணியந்தோட்டத்தில் மீட்கப்பட்ட ஆட்டிலறி எறிகணையை செயலிழப்பதற்கு இராணுவத்தினரின் உதவியை நாடியுள்ளதாகவும் இலங்கை காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்