ரியாத்: சவுதி மன்னரின் உத்தரவின்பேரில் 610 கிலோ எடை கொண்ட வாலிபர் 320 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். சவுதியின் ஜிசான் மாகாணத்தில் உள்ள ஜசான் நகரைச் சேர்ந்தவர் காலித் மொஹ்சன் அல்-ஷயேரி. 610 கிலோ எடை கொண்ட அவரது உடல் எடையை குறைக்குமாறு சவுதி மன்னர் அப்பதுல்லா உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ரியாத்தில் உள்ள கிங் பஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
