GuidePedia

0


துன்னாலை கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த ஒருவர் 7 இலட்சத்து 32000 ரூபா காசோலையினை மோசடி செய்துவிட்டு தற்போது தலைமறைவாகியுள்ளதாக சாவகச்சேரி மந்திகைச் சந்தியினைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

துன்னாலை கிழக்கினைச் சேர்ந்த மேற்படி நபர் மந்திகை நபருக்கு கொடுக்கவேண்டிய மேற்படி தொகைக்காக 2013.07.22 ஆம் திகதியிடப்பட்ட காசோலையொன்றை எழுதிக் கொடுத்துள்ளார். இருந்தும் அது வங்கியில் பணம் இல்லையென திரும்பியுள்ளது என முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரிடம் நேரடியாக பணம் பெறுவதற்கான முயற்சியில் இதுவரைகாலமும் தான் ஈடுபட்டதாகவும் எனினும் பணம் தரவேண்டிய நபர் தற்போது தலைமறைவாகியுள்ளமையினாலேயே மேற்படி நபர் மீது தற்போது முறைப்பாடு செய்ய வந்ததாக மந்திகை வாசி தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தலைமறைவாகியுள்ள நபரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

 
Top