GuidePedia

0
திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் இருந்து இது வரை 79 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 
இன்று சனிக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் 29 ஆவது தடவையாக புதை குழியில் அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது  மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
 
கண்டு பிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்றைய அகழ்வுப்பணியின் போது அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரட்ண தலைமையிலான குழுவினர்   சமூகமளிக்கவில்லை.
 
இதனால் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படவில்லை.
 
 மன்னார் நீதவான் முன்னிலையில் பொலிஸாரும்,தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து பணியில் ஈடுபட்டனர். 
 
மீண்டும் நாளை ஞாயிற்றுக்கிழமை 30 ஆவது தடவையாக அகழ்வுப்பணிகள் இடம்பெறவுள்ளது. 

Post a Comment

 
Top