திருமணம் செய்ய முடிவெடுத்து விட்டபோதும், நடிப்பை அதே வேகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறார் நஸ்ரியா. வருங்கால கணவரான பஹத்துடன் ஒரு மலையாள படத்திலும், இரண்டு தமிழ் படங்களிலும், தற்போது நடித்து வருகிறார்.
மலையாளத்தில் ‘உஸ்தாத் ஹோட்டல் என்ற பெயரில் வெளியான படம், தற்போது தமிழில் தலப்பாகட்டி’ என்ற பெயரில், ரீ-மேக் ஆகிறது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க நஸ்ரியாவிடம் கேட்டபோது, இதன் மலையாள பதிப்பில் நடித்திருந்த நித்யா மேனனுக்கு ரொம்ப சிறிய வேடமாயிற்றே என்று இழுத்தாராம். அதையடுத்து, மலையாளத்தை விட தமிழில் ஹீரோயின் வேடத்துக்கு அதிக பில்டப் கொடுத்து, அவரை ஒப்பந்தம் செய்து விட்டனர். திருமணத்துக்கு பின்னும் நடிப்பீர்களா’ என, அவரிடம் கேட்டால், ‘நல்ல வேடமாக இருந்தால், நடிக்க வேண்டியது தானே என, இமைகளை சிமிட்டி, உதடுகளை குவித்து, அழகாக சிரிக்கிறார், நஸ்ரியா.

Post a Comment