ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்றும் இனவாதக் கட்சியாக செயற்பட்டதில்லை. அதனால்தான் அனைத்து இன மக்களும் இன,மத மொழி பேதமின்றி தொடர்ந்தும் இக்கட்சியினை
ஆதரித்து வெற்றிபெறச் செய்கின்றனரென பதுளை மாவட்ட ஆளுங்கட்சி அமைப்பாளரும்,நீர்பாசனை வடிகாலமைப்பு அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா குறிப்பிடுகின்றார்.
பசறைத் தொகுதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற பசறை தொகுதியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றும் இனவாதக் கட்சியாக செயற்பட்டதில்லை. அதனால் தான் அனைத்து இன மக்களும் இன,மத ,மொழி பேதமின்றி தொடர்ந்து இக்கட்சியினை ஆதரித்து வெற்றி பெறச் செய்கின்றனரென பதுளை மாவட்ட ஆளுங்கட்சி அமைப்பாளரும் நீர்பாசன வடிகாலமைப்பு அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிடுகின்றார்.
பசறைத் தொகுதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற பசறை தொகுதியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
அவர் மேலும் கூறிகையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பசறைத் தொகுதிக்கு தமிழ் அமைப்பாளரை நியமித்தவுடன் பசறை தொகுதிக்கு தமிழ் பேசும் அமைப்பாளர் தேவையில்லையென எமது பங்காளிக் கட்சிகளே எம்மிடம் பலமுறை வலியுறுத்தியிருந்தன. எமது ஆதரவாளர்கள் மத்தியிலும் இது குறித்து ஒருவித ஜயப்பாடு இருந்தது.
எனினும் நாம் வடிவேல் சுரேஸையே தொடர்ந்து தொகுதி அமைப்பாளராகக் கொண்டு செயற்பட்டு எம் மக்களின் அபிவிருத்தி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். எமது கட்சி அன்றிலிருந்து இன்று வரை இன,மத,மொழி வேறுபாடுகளை புறந்தள்ளி செயற்பட்டு வருவதாலேயே இவ்வகையான துணிகரமான தீர்மானங்களை எடுக்க முடிகின்றது.
இன்று நாட்டில் நிலவி வந்த யுத்த அபாய சூழ்நிலைகள் நீங்கி சகல மக்களும் ஒற்றுமையுடன் கைகோர்த்து நாட்டின் அபிவிருத்திக்காக பாடுபடும் காலம் உதயமாகியுள்ளது. யுத்தம் நீங்கியதாலேயே மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தால் துரித அபிவிருத்திகளை கிராமம் , நகரம் ,தோட்டம் என்று எல்லா இடங்களிலும் மேற்கொள்ள முடிகின்றது. எதிர்வரும் காலங்களில் பசறை வாழ் மக்கள் எமது அரசாங்கத்தின் அதிக வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் உங்கள் தொகுதி அமைப்பாளரின் கரங்களைப் பலப்படுத்தி எமக்கு ஆதரவு நல்க வேண்டுமென்றார் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.
தொடர்ந்து நிகழ்வில் உரை நிகழ்த்திய பசறை தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் வடிவேல் சுரேஸ் பதுளை மாவட்ட அமைப்பாளரும் அமைச்சருமான நிமலின் வழிகாட்டலில் பசறை நகருக்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள எம்மால் முடிந்துள்ளது. அதே போன்றே எம்மால் கித்துல்கல மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நிலக்கீழ் குழாய் குடிநீர் விநியோகம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் நிமல் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா 30 இலட்சத்தை பசறை தொகுதியின் அபிவிருத்தி பணிகளுக்காக ஒதுக்கித் தந்துள்ளார். அவருக்கு நாம் நன்றி கூற வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தின் காலத்திலே தான் அதிகளவில் தோட்டப்புறங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி கண்டு வருகின்றது. இது குறுகிய அரசியல் நலன் கருதி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி அல்ல எம் மக்களின் தேவைகளை அறிந்து ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியாகும்.
எதிர்வரும் காலங்களில் நாம் அதிக வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ள எமது தொகுதியை சக்திமிக்கதாக மாற்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு வெற்றி பயணத்தை தொரடவேண்டுமெனக் குறிப்பிட்டார்.

Post a Comment