விரைவில் விஜய் நடிக்கும் படத்தினை இயக்கவிருப்பதாக வந்த செய்தியினை உறுதி செய்துள்ளார் இயக்குனர் சசிகுமார்.
தற்போது விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து விஜய் யாருடைய படத்தில் நடிப்பார் என்பது பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது.
நேசன், சசிகுமார் ஆகியோர் விஜய்யை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தாலும், விஜய் தரப்பில் இருந்து எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் தான் விஜய்யிடம் கதை ஒன்றை கூறியுள்ளதாகவும், அந்த கதை விஜய்க்கு பிடித்திருந்ததாகவும் சசிகுமார் தொலைக்காட்சி செவ்வியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சசிகுமாரிடம் விஜய் கதை கேட்டுவிட்டதால், சிம்புதேவன் படத்தினைத் தொடர்ந்து விஜய் சசிகுமார் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதைப் போலவே இயக்குநர் நேசனிடமும் தனக்காக ஒரு கதை தயார் செய்யுமாறு கூறியிருக்கிறார் விஜய்.

Post a Comment