இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான கத்ரினா கைப் – ரன்பீர் கபூர் ஆகியோர் காதலித்து வருவது அனைவரும் அறிந்த விடயம்.
இந்த காதல் ஜோடி தமது விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கான பயண ஏற்பாடுகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இந்த ஜோடி தமது விடுமுறையை கழிப்பதற்கு அமெரிக்கா மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கு சென்றது.
எதிர்வரும் மார்ச் மாத ஆரம்பத்தில் கத்ரினா கைப் இலங்கை வரும் அதேவேளை, ஒரு சில நாட்களின் பின்னர் ரன்பீர் இலங்கை வரவுள்ளார்.

Post a Comment