அமெரிக்கர்களின் கனவுக்கு அச்சுறுத்தலாகவுள்ள பொருளாதார சமத்துவமின்மையை களைவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா செவ்வாய்க்கிழமை வாக்குறுதியளித்துள்ளார்.
அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளும் கலந்துகொண்ட வருடாந்தக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி சமத்துவமின்மை களைவது தொடர்பில் சட்டத்தின் துணையின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்க அவர் வாக்குறுதியளித்துள்ளார்.
சமத்துவமின்மை தீவிரமாகும் போது மேல் நோக்கிய நகர்வு ஸ்தம்பிதமடையும் எனத் தெரிவித்த பராக் ஒபாமா, வளர்ச்சியை வேகப்படுத்துவதற்கான உறுதியான, சாத்தியமான பிரேரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகக் கூறினார்.
அனைவரும் இந்த ஆண்டை செயற்பாட்டுக்கான ஆண்டாக மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்க குடும்பங்களுக்கான வாய்ப்புகளை விஸ்தரிக்க எங்கும், எப்போதும் சட்டமின்றி தான் நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனக் கூறிய அவர், அதையே தான் செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.
அதேசமயம், ஈரான் மீதான புதிய தடைகள் பேச்சுவார்த்தைகளுக்கு குந்தகம்
விளைவிக்கும் என்பதால் அந்த தடைகளுக்கு எதிராக தனது மறுப்பாணை அதிகாரத்தைப் பிரயோகிக்கவுள்ளதாக ஒபாமா கூறினார்.
பராக் ஒபாமா மீள்தேர்தலில் வெற்றி பெற்று ஒரு வருட காலத்துக்கு மேலாகின்ற நிலையில், அவரால் நிறைவேற்ற முன்வைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
குடியரசுக் கட்சியானது அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையை கட்டுப்படுத்தி வருவதுடன் செனட் சபையிலும் கணிசமான அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது.

Post a Comment