GuidePedia

0
ஹொங்­கொங்கில் 'எச்7என்9' பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்­றுக்­குள்­ளாகி மூன்­றா­வது நபர் ஒருவர் புதன்­கி­ழமை உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.
அயல் நாடான சீனா­வி­லுள்ள ஷென்ஸென் நக­ருக்கு பய­ணத்தை மேற்­கொண்டு திரும்­பிய 75 வயது நப­ரொ­ரு­வரே பறவைக் காய்ச்சல் தொற்­றுக்­குள்­ளாகி ஹொங்­கொங்­கி­லுள்ள துயன் முன் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட நிலையில் புதன்­கி­ழமை காலை மர­ண­மா­கி­யுள்ளார்.
சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பறவை இனங்­களில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது அவ­தா­னிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட கோழிகள் உள்­ள­டங்­க­லான சுமார் 22,000 பற­வைகள் அழிக்­கப்­பட்ட நிலை­யி­லேயே மேற்­படி நபர் உயி­ரி­ழந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்கு முன் அந்­நாட்டில் கடந்த 14 ஆம் திகதி 65 வயது நப­ரொ­ரு­வரும் கடந்த வருடம் டிசம்பர் மாத இறு­தியில் 80 வயது நப­ரொ­ரு­வரும் பறவைக் காய்ச்சல் தொற்­றுக்­குள்­ளாகி மர­ண­ம­ாகியுள்ளனர்.
அவர்கள் இருவரும் மரணமாவதற்கு சில தினங்களுக்கு முன் சீனாவிற்கு விஜயத்தை மேற்கொண்டு திரும்பியிருந்தமை குறிப் பிடத்தக்கது.

Post a Comment

 
Top