GuidePedia

0
இலங்கை பராளுமன்ற ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவு நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தின் பத்திரிகையளார் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது சங்கத்தின் புதிய தலைவராக பிரகித் பெரேரா (சுவர்ணவாஹினி), பொதுச் செயலாளராக ஜே.ஜி.ஸ்டீபன் (வீரகேசரி) பொருளாளராக சுராஜ் அல்விஸ் (வி.எப்.எம்), தேசிய அமைப்பாளராக கெலும் பண்டார (டெய்லி மிரர்) தெரிவுசெய்யப்பட்டனர்.
 
உபதலைவர்களாக ஹரீந்திரநாத் சந்திரசி (ஊடக மத்திய நிலையம்), எம். எஸ் பாஹிம் (தினகரன்), உப செயலாளராக சுபாஹினி சேனாநாயக்க (தினமின) ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டடுள்ள அதேவேளை, சங்கத்தின் நிறைவேற்றுக் குழு  உறுப்பினர்களாக அஷோக்குமார் (தினகரன்), டிட்டோகுகன் (தினக்குரல்), ஆர்.சனத் (சுடர்ஒளி), யொஹான் பெரேரா (டெய்லிமிரர்), நிமல் செனவிரத்ன ( இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம்), தரிந்து சந்திங் (ஸ்ரீ.எப்.எம்), சம்பத் குமார (நெத். எப்.எம்), ஆரியரத்ன ரணபாகு (லங்காதிப), சரித்த தனங்சய (சுயா.தொ), துஷார வீரரத்ன (ஸ்ரீ எப்.எம்), பெத்தும் விக்கிரமரட்ன (லக்பிம), அமில பிரசன்ன (ஹிரு. எப்.எம்), அமில பிரசன்ன (ஹிரு எப்.எம்), இரங்கி காரங்கே (டெய்லி நியூஸ்), அசங்க திலகரட்ன (ரூபவாஹினி) மற்றும் அசித்த பெரேரா (திவயின) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

 
Top