அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அலுவலத்தால் (National Security Agency) ஜேர்மானியப் பிரமதர் ( Kanzlerin ) Angela Merkel உட்பட பல ஜரோப்பிய அரசியல் பிரமுகர்களின்; தொலை பேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதன் காரணமாக, பேச்சுவார்தை மட்டத்திலிருக்கும் ஜரோப்பிய, அமெரிக்க சுதந்திர வர்த்தகத்திற்கான ஒப்பந்த நடவடிக்கை (Transatlantic Free-trade Agreement) எவ்வவையிலும் பாதிப்படையாதென, ஜரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இருவேறு பிரச்சனைகளும்; அவற்றின் வழியிலும் போக்கிலும் தனித்தனி கையாளப்படும் எனவும் கூறியுள்ளார். எனினும் அமெரிக்க ஜனாதிபதி Barack Obama, அமெரிக்க தேசியப் பாதுகாப்புப் அலுவலகத்தின் ஒட்டுக் கேட்கும் நடவடிக்கை தொடரும் எனவும் கூறியுள்ளார்
