இதனால் 1000க்கும் மேற்பட்ட வணிக மற்றும் சமுதாய நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.
தற்போது, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனநாயகம் மலர்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்காக போராடிய எதிர் கட்சித்தலைவர் ஆங் சன் சூகியும் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் அந்த தடையை நீக்கி, ஐரோப்பிய யூனியன் நேற்று உடன்படிக்கையில் கையொப்பமிட்டது. இருந்தும், ஆயுதங்கள் இறக்குமதிக்கான தடையை அது நீக்கவில்லை.
இந்த தடை நீக்கத்தால், இயற்கை வளம் மிகுந்த மியான்மரில் ஐரோப்பிய கம்பெனிகள் மீண்டும் கால் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு அமெரிக்காவும், கம்பெனிகள் அங்கு முதலீடு செய்யுமாறு தடைகளை தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.
மியான்மரில் இன மோதல்கள் ஏற்பட்டு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடை நீக்கம் வந்துள்ளது என்று கூறப்படுகிறது.
