GuidePedia

காசிமேடு: காசிமேடு எம்ஜிஆர் நகர் குடிசை பகுதியை சேர்ந்தவர் செந்தில் (32). கடந்த 5 ஆண்டுக்கு முன்பு, தனது மனைவியை எரித்து கொன்ற வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்தார்.இதுதொடர்பான வழக்கு தற்போது சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில், செந்திலுக்கும், இறந்த அவரது மனைவியின் தங்கை கீதா என்பவருக்கும் நேற்று முன்தினம் மாலை தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, காசிமேடு போலீசில் கீதா புகார் செய்தார். அதில், தனது சகோதரி இறப்பு சம்பந்தமாக நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரக்கூடாது என மிரட்டியதாக கூறினார்.புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Kasimedu: MGR Nagar slum belonged Kasimedu Senthil (32). Last 5 years ago, burned his wife arrested and went to jail for murder. Then, came out on bail.
 
Top