GuidePedia

* சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிர்வாகக் குழு கூட்டம் சிங்கப்பூரில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுக்கு கூடுதல் அதிகாரம் மற்றும் வருவாயில் அதிக பங்கு... உட்பட பல்வேறு புதிய சட்ட விதிமுறைகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ஐபிஎல் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம், பெங்களூரில் பிப். 12, 13 தேதிகளில் நடைபெற உள்ளது. ஐபிஎல் சூதாட்ட சர்ச்சை குறித்த விசாரணை முடிவு தெரியும் வரை, இந்த ஏலத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி பீகார் கிரிக்கெட் சங்க செயலர் ஆதிய வர்மா நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை 10ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

* ரஷ்யாவின் சோச்சி நகரில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் இந்தியா சார்பில் 3 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய ஒலிம்பிக் சங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், தொடக்க விழா நிகழ்ச்சியில் இவர்கள் இந்தியக் கொடி ஏந்தி அணிவகுப்பில் பங்கேற்காமல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கொடிக்கு பின்னால் அணிவகுக்க நேர்ந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

* அர்ஜென்டினாவில் அடுத்த வாரம் நடக்க உள்ள ஏடிபி டென்னிஸ் போட்டித் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக நம்பர் 1 வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) அறிவித்துள்ளார்.

* ரஞ்சி கோப்பை சாம்பியன் கர்நாடக அணியுடன் ஹர்பஜன் சிங் தலைமையிலான இதர இந்திய அணி மோதும் இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி (பிப். 913), பெங்களூர் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்த போட்டியின்போது, ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளது.
Next week's ATP tennis tournament in Argentina to withdraw due to injury, the No. 1 player Rafael Nadal (Spain) said.
 
Top