GuidePedia

0


மவுசாகலை நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின், சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
தனது நண்பனுடன் குளிக்க சென்று போது நீரில் மூழ்கி நேற்று மாலை இந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து குறித்த இளைஞனின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இளைஞனின் சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளது.
நுவரெலியா – ஹாவாஎலியை சேர்ந்த 20 வயதான இளைஞன் ஒருவனே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை,  கொழும்பு தெஹிவளை கடற்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான  விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

 
Top