இணையத்தளங்களை பார்வையிட வசதி செய்து
தரும் நிலையமொன்றில், பாடசாலைக்கு செல்லாமல் வீடியோ விளையாட்டு
விளையாடுவதில் ஈடுபட்டிருந்த 14 வயதுடைய மகனை கண்டித்த தந்தை, மகனின் கத்தி
குத்துக்கு இலக்காகி மரணமடைந்த பரிதாப சம்பவமொன்று சீனாவில்
இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்கு செல்லாமல் தென் சீனாவில் ஹ_னான் மாகாணத்தில் லோடி நகரிலுள்ள
இணையத்தள நிலையத்துக்கு விஜயம் செய்து வீடியோ விளையாட்டுக்களை விளையாடுவதை
மேற்படி இளைஞன் வழமையாக கொண்டிருந்துள்ளான்.
இந்நிலையில் சம்பவ தினம் அந்த நிலையத்துக்கு விஜயம் செய்து தன்னைக்
கண்டித்த தந்தையான லூவை மகன் சினமடைந்து கத்தியால் குத்தி படுகொலை
செய்துள்ளான்.
இந்நிலையில் தனது கணவரின் மரணத்துக்கு வன்முறை வீடியோ விளையாட்டுக்களே காரணம் என சிறுவனின் தாயான ஹ_வா மேய் தெரிவித்தார்.

Post a Comment