பூண்டுலோயா பிரதான நகரத்தில் இன்று காலை
ஏற்பட்ட தீ விபத்துக்கு கட்டிடங்களின் ஒழுங்கீனமே காரணம் எனவும் இந்த நகரம்
விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்தார்.
பூண்டுலோயாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 31 கடைகள் எரிந்து நாசமாயின.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்கி வைத்தார்.
அதன்பின்னர் அங்கு அவர் உரை நிகழ்த்துகையில்,
இங்குள்ள வர்த்தக கட்டிடங்கள் முறையாக அமைக்கப்படாமையே தீ விபத்துக்குக் காரணம் என அதிகாரிகள் என்னிடம் கூறினர்.
பூண்டுலோயா நகரத்தை உடனடியாக அபிவிருத்தி செய்யுமாறு நகர அபிவிருத்தி
அதிகார சபையிடம் பணிப்புரை வழங்கியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment