ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரத்தை தமிழினப் போராட்டமாக சித்தரிக்க
முயல்வது ஆபத்தான விஷயம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்
தெரிவித்தார்.
ராஜீவ் கொலை குற்றவாளிக ளாக முருகன், சாந்தன், பேரறிவா ளன் ஆகியோரின்
விடுதலை செய்யும் நடவடிக்கை குறித்து ‘தி இந்து-விடம் தமிழ்நாடு காங்கிரஸ்
கட்சி தலைவர் ஞானதேசிகன் கூறியதாவது: புல்லர் வழக்கில் கருணை மனு குறித்து
காலதாமதமாக முடி வெடுக்கப்பட்டதைக் காரணம் காட்டி தூக்குத் தண்டனை ஆயு ளாக
குறைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பின் அடைப்படையில் இப்போது, ராஜீவ் கொலையாளி
களுக்கும் தூக்கு ஆயுளாக குறைக்கப்பட்டிருக்கி
றது. ஆனால், புல்லர் வழக்கின் தன்மைக்கும் ராஜீவ் கொலை வழக்கின்
தன்மைக்கும் உள்ள வேறுபாடுகளை உச்ச நீதி மன்றம் ஆராய்ந்ததா என்று தெரிய
வில்லை.
இந்த வழக்கு தமிழகத்தில் அரசியல் ரீதியாக கையாளப் படுகிறது. இதை தமிழினப்
போராட்டமாக சித்தரிக்க முயல்வது ஆபத்தானது. தூக்குத் தண்டனை பெற்ற
கொலையாளிகளுக்காக வக் காலத்து வாங்கும் கட்சிகளும் அமைப்புகளும் ராஜீவ்
கொலை சம்பவத்தில் பலியான 18 தமிழர்களின் குடும்பங்களைப் பற்றி
சிந்திக்கவில்லை. இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் தாக்கத்தை
ஏற்படுத்தாது’’ என்றார்.
“ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யக் கூடாது என நீங்கள் மத்திய அரசுக்கு
கோரிக்கை வைப்பீர்களா? என்று கேட்டதற்கு, ’’இது மத்திய அரசுக்கும் மாநில
அரசுக்கும் இடையில் நடக்கும் அரசாங்க ரீதியிலான நடவடிக்கை. இதில் நான்
எந்தக் கருத்தும் சொல்லமாட்டேன்’’ என்று சொன்னார் ஞானதேசிகன்.
