
திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் திலீப்குமார்,37. இவரது மனைவி திலகம்,37. இருவரும் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து மகன்கள் உள்ளனர்.
இதில், திலகத்துக்கும், சேனைய கல்லுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், 25, என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனால் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மனைவியை விட்டு திலீப்குமார் பிரிந்து சென்றுவிட்டார். மகன்களுடன் திலகம் தனியாக வசித்து வருகிறார். எனினும் திலகத்தின் கள்ளக்காதல் தொடர்ந்தது.
இருவரையும் மகன்கள் கண்டித்தனர். ஆனால், இருவரும் கேட்கவில்லை. இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு சமயபுரம் நால்ரோடில் டீ குடிக்க பிரபாகரன் வந்தார்.
அப்போது, அவரை மறித்த திலகத்தின் மூத்த மகன் கோவிந்தராஜ், 20, திலகத்தின் தங்கை மகன், சதீஷ்,19, ஆகியோர் பிரபாகரனை சராமரியாகக் கத்தியில் குத்தினர். இதில், சம்பவ இடத்திலேயே பிரபாகரன் பலியானார்.
தகவலறிந்த சமயபுரம் போலீஸார், பிரபாகரன் உடலை கைப்பற்றி, தலைமறைவான சகோதரர்களை தேடி வருகின்றனர். இருவரும் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
