முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டுப் பகுதியில் கத்திக் குத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அர்ச்சுணன் றஜீவன் (வயது 19) என்பவர் வியாழக்கிழமை (13) உயிரிழந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை நேற்றையதினம் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
புதன்கிழமை (12) நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் உயிரிழந்த இளைஞருக்கும் மற்றுமொரு இளைஞருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதால் கத்திக் குத்து இடம்பெற்றது.
இதில் படுகாயமடைந்தவர் உடனடியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
