காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணஹமவின் பங்கேற்பின்றி யாழ்ப்பாணத்தில் அந்த ஆணைக்குழுவின் விசாரைணகள் இடம்பெற்று வருகின்றது.
கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கில் காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்.மாவட்டத்தில் இன்றுடன் நான்காவது நாளாக தொடந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்த விசாரணைகளின் சாட்சியமளிப்புகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது 10.55 மணியளவில் 17 ஆவது நபரின் விசாரணைகள் முடிவடைந்தபோது ஆணைக்குழுவின் தலைவர் உடல்நலம் குறைவாகவுள்ளதாக கூறிவிட்டு விசாரணைகளிலிருந்து வெளியேறினார்.
தற்போது இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் குறித்த ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் முன்னிலையில் இடம்பெற்று வருகினறது.
இதுவரை இடம்பெற்ற விசாரணைகளில் இராணுவத்தினருக்கு எதிராகவே அதிகளவான சாட்சியங்கள் பதியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment