தஞ்சை 20 கண் பாலம் அருகே உள்ள சின்னதம்பி நகர் 1–ம் தெருவை சேர்ந்தவர்
மகாதேவன்(57), விவசாயி. இவரது முதல் மனைவி லலிதா. திருமணமானது முதல்
கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
பின்னர் சில வருடங்கள் மனைவியுடன் குடும்பம் நடத்தி விட்டு அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதையடுத்து கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மகாதேவன், கவிதா(25) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். முரளி, அசோக்குமார் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு கும்பல் மகாதேவனின் 2 மாடி கொண்ட வீட்டுக்குள் திடீரென புகுந்தது. அந்த கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது.
இதையடுத்து வீட்டுக்குள் இருந்த மகாதேவனை அடித்து உதைத்தது. பின்னர் அவர் வலி தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பி ஓடி 20 கண்பாலம் அருகே சென்றார். தொடர்ந்து அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று உருட்டுக் கட்டையால் பின் தலையில் தாக்கி கொலை செய்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தஞ்சை நகர தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யபட்டு பிணமாக கிடந்த மகாதேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மகாதேவனின் குடும்பச்சொத்து சுமார் 15 ஏக்கர் விளார் புறவழிச்சாலையில் உள்ள சிந்து நகரில் உள்ளது. அங்கு தனது தந்தை ரெங்கசாமியின் பட்டபெயரான சின்னதம்பி என்ற பெயரை வைத்தார்.
சின்னதம்பிநகர் என்ற பெயரில் அந்த இடத்தை தனித்தனியாக பிளாட் போட்டு விற்பனை செய்து வந்தார். இந்த சொத்தின் மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக மகாதேவனின் பெரியப்பா குடும்பத்தினருக்கும் அதாவது ரெங்கசாமியின் அண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்குகள் நடந்து வருகின்றன.
இதன் காரணமாகவே மகாதேவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து மகாதேவனின் பெரியப்பா செங்கமலத்தின் மகன் ராமலிங்கம், அவரது மகன் சிவா, குமரன், ராமலிங்கம் தம்பி ராஜேந்திரன், அவரது மகன் கார்த்திக் மற்றும் இன்னொரு நபர் என 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட மகாதேவன் மீது தஞ்சை நகர தெற்கு போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் உள்ளன. கடந்த 2012–ம் ஆண்டு இவர் காலியாக இருந்த தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில் குடியிருந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
தனியாக வசித்து வந்த அந்த பெண் சம்வத்தன்று குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது தனது நகைகளை கழற்றி பீரோவில் வைத்திருந்தார். அப்போது மகாதேவன் நைசாக சென்று பீரோவில் வைத்திருந்த அந்த நகைகளை திருடிச் சென்று விட்டார்.
இதுதொடர்பாக அந்த பெண் தஞ்சை தெற்கு நகர தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் மகாதேவனை கைது செய்து அவர் திருடிய நகைகளை மீட்டு, சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து தனது வீட்டை மீண்டும் அரிசி கடையில் வேலை பார்த்து வரும் ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அப்போது மகாதேவனின் மனைவி கவிதாவுக்கும் அரிசி கடை ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மகாதேவன் வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்து அந்த அரிசி கடை ஊழியரை சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாதேவனை கைது செய்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை திருச்சி சிறையில் அடைத்தனர்.
மகாதேவன் காலை 9 மணிக்கு டாஸ்மாக் கடை திறந்ததும் முதல் ஆளாக சென்று மது வாங்கி குடித்து போதைக்கு அடிமையானதாகவும், மேலும் பல பெண்களிடம் தவறான தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து தெற்கு போலீஸ் நிலையத்தில் வைக்கப்படும் பிரபல ரவடிகளின் பெயர் பட்டியலில் அவரது பெயர் இடம்பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.