GuidePedia

0


இங்கிலாந்தில் உள்ள ஒரு பெண், தான் ஆசையாய வளர்த்த தங்கநிற மீனை கொன்று தின்றுவிட்ட பூனையை மைக்ரோ ஓவனில் வைத்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இங்கிலாந்து நாட்டில் Laura Cunliffe என்ற 23 வயது பெண் மிகவும் ஆசை ஆசையாய் தங்க நிற மீன் ஒன்றை மீன் தொட்டியில் வளர்த்து வந்தார். இவர் மேலும் பூனைக்குட்டியையும் வளர்த்து வந்தார். இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பூனை தங்கநிற மீனை தின்றுவிட்டது.
வீட்டிற்கு வந்து பார்த்த Laura Cunliffe, தங்க நிற மீனைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அந்த மீனை தனது பூனைதான் கொன்றிருக்கும் என எண்ணி கடும் கோபமடைந்த அவர் அந்த பூனையை தூக்கி மைக்ரோ ஓவனில் வைத்து சுவிட்சை ஆன் செய்துவிட்டார். சுமார் ஒரு மணிநேரம் கழித்து பார்த்தபோது அந்த பூனை மூச்சுதிணறலாலும், வெப்பத்தினாலும் இறந்து கிடந்தது.
இந்த சம்பவத்தை அறிந்த RSPCA (Royal Society for the Prevention of Cruelty to Animals) என்ற அமைப்பினர் Laura Cunliffe மீது வழக்கு தொடர்ந்தனர். விசாரணையில் Laura Cunliffe தனது தவறினை ஒப்புகொண்டார். அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கி அவரை மன்னித்துவிடும்படி அவரது வழக்கறிஞர் கேட்டுக்கொண்டாலும், நீதிபதி அதை ஏற்கவில்லை. மிகக்கடுமையாக ஒரு பூனைமேல் கோபத்தை காட்டிய பெண்ணுக்கு இரக்கம் காட்ட முடியாது என்று கூறிவிட்டும் தீர்ப்பை ஒத்தி விஅத்துள்ளார். வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி தீர்ப்பு வெளியாகும் என தெரிகிறது.

Post a Comment

 
Top