கிழக்கு ரஷ்ய தீவான சகாயினிலுள்ள தேவாலயமொன்றில் துப்பாக்கிதாரியொருவர் நடத்திய சூட்டில் கன்னியாஸ்திரி ஒருவர் உட்பட இருவர் பலியானதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் அநேகருக்கு காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
யுஸொனோ சகவின்ஸ்க் நகரில் இடம்பெற்ற மேற்படி துப்பாக்கிச் சூட்டையடுத்து தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தரான துப்பாக்கிதாரி (சுமார் 25 வயது) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது என கண்டறியப்படவில்லை.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் சம்பவ இடத்திலிருந்து மேற்கே சுமார் 7500 கிலோ மீற்றர் தூரத்தில் சொசி நகரில் இடம்பெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தொடர்பு இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரா என்பதை கண்டறியும் முயற்சியில் மன நல நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக ரஷ்யாவின் பிரதான அரசாங்க புலன் விசாரணை சபை குறிப்பிட்டுள்ளது.

Post a Comment