GuidePedia

0
தமிழீழ விடுதலை புலிகளின் சிறுவர் போராளியாக இருந்த போது கொலை குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கு 14 வருடங்களுக்கு பின்  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
திருகோணமலை நீதிமன்றம் கடந்த 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை மேற்படி தீர்ப்பினை வழங்கியுள்ளது.
 
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 
 
1990ஆம் ஆண்டு கிண்ணியாவிற்கு அருகிலுள்ள உப்பூர் எனும் கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களை விடுதலை புலிகளுடன் சேர்த்து கொலை செய்த குற்றச்சாட்டில் 14 வயதாக இருந்த போது மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 
 
ஆலங்கேணியை சேர்ந்த தங்கராஜா சிவ கந்தராஜா எனும் விடுதலை புலிகளின் சிறுவர் போராளியான இவர் 1990 ஆம் ஆண்டு சீனகுடாவில் கைது செய்யப்பட்டனர்.
 
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருந்த விசேட நீதிமன்றத்தில் இவரது வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போதிலும் போதிய சாட்சியங்கள் இன்மையால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 
 
கடந்த 3 வருடங்களின் முன்பு மேற்படி வழக்கு மீண்டும் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனித நாயகம் சந்தேக நபரின் சார்பாக ஆஜராகினார். அதன்பின்னர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.எல்.சாலி ஆஜராகியிருந்தார். இந்நிலையில் கடந்த 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சந்தேக நபருக்கு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி ரணராஜா மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
 
குறித்த சந்தேக நபர் பிணையில் சென்றிருந்த காலப்பகுதியில் திருமண பந்தத்தில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

 
Top