GuidePedia

0

Hotel-Atlante-Star-photos-Room-Guest-Room

சுவிட்சர்லாந்தின் பிரபல ஹோட்டலில் இரண்டு மாதங்களாக சொகுசாக,வாழ்ந்துவிட்டு பணம் தராமல் தப்பிக்க முயன்றுள்ளனர் 3 பெரியவர்கள்.சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 60 வயதைத் தாண்டிய மூன்று பேர் தங்கியுள்ளனர்.மதுபானம் , மசாஜ் என உயர்தர சொகுசுகளை அனுபவித்து, 60 நாட்களுக்கு ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

இவர்கள் ஹோட்டலில் தங்கி கும்மாளமிட்டதற்கான கட்டணம், 1.40 கோடி ரூபாயை எட்டியது. பணத்தைச் செலுத்த ஹோட்டல் நிர்வாகம் கெடுபிடி செய்த போது, அங்கிருந்து நைசாக, கம்பி நீட்டப் பார்த்தனர். ஹோட்டல் அதிகாரிகள் இவர்களைப் பிடித்து விசாரித்த போது, தங்களிடம் பணம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து பணத்தை விரைவில் கொடுத்து விடுகிறோம் என பத்திரத்தில் எழுதிக் கொடுத்து வெளியேறி உள்ளனர்.

இவர்கள் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஹோட்டலுக்குச் சென்று, இது போன்று அதிகம் செலவிட்டு இறுதியில் காசு கொடுக்காமல் தப்பி விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.ஹோட்டலில் தங்க வரும் போது, ஹெலிகாப்டர், ரோல்ஸ்ராய்ஸ் கார் போன்றவற்றில் பந்தாவாக வந்து இறங்குவதை பார்த்து இவர்களை ஹோட்டல் நிர்வாகம் மதிப்பாக நடத்தும். பின்னர் இவர்கள் புறப்படும் போது மானம் காற்றில் பறக்கும்.

இவர்கள் மூன்று பேர் மீதும் ஏற்கனவே, சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் மோசடி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top