தனிமையில் வாழ்ந்து வந்த இத்தாலிய பெண்ணொருவர், சுவிட்சர்லாந்துக்கு வந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தாலியின் தெற்கு நகரமான வைஸ்சென்ஸா பிரதேசத்தை சேர்ந்த 85 வயது மதிக்கத்தக்க மூதாட்டி Oriella Cazzanello.
இவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் இத்தாலியில் இருந்து சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் உள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அங்கு தற்கொலைக்கு மருத்துவ ரீதியாக உதவியளிப்பதற்காக அவர், அந்த மருத்துவமனைக்கு 10 ஆயிரம் பிராங்குகளை செலுத்தியுள்ளார்.
குறித்த மருத்துவமனையில் இருந்து உயிரிழந்த பெண்ணின் அஸ்தியும் மரணச் சான்றிதழும் கிடைத்த போது பெண்மணி உயிரிழந்ததை குடும்பத்தினர் அறிந்து கொண்டனர்.
வயதான இந்த பெண்மணி நோயினால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை, ஆனால் வாழ்க்கை முடித்து கொள்ள அவர் தீர்மானித்தார்.
தனிமையும் வயது முதிர்வின் அசதியுமே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
எனினும் வயதான இந்த பெண்மணி எப்போதும் சுதந்திரமாகவே இருக்க விரும்பியவர் எனவும், விடுமுறை நாட்களில் எவருக்கும் அறிவிக்காமல் தனியாக இடங்களுக்கு சென்று வருபவர் எனவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் அவர் காணாமல் போயிருந்ததுடன் அவர் காணாமல் போனமை குறித்து அவரது உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
தாங்கி கொள்ள முடியாத வலி வேதனை, கடுமையான நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களில் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் கோரிக்கைக்கு அமைய அவர்களின் தற்கொலைக்கு மருத்துவ ரீதியாக சுவிட்சர்லாந்து உதவி வருகிறது.
இதனை அறிந்து கொண்ட பின்னரே வயதான இத்தாலிய பெண் தனது வாழ்க்கை முடித்து கொள்ள சுவிட்சர்லாந்து நோக்கி புறப்பட்டுச் சென்றிருந்தார்.
சுவிர்சட்லாந்தின் நாட்டின் சட்டத்திற்கு அமைய ஒருவர் தானாக முன்வைந்தால் மாத்திரமே தற்கொலைக்கு உதவ முடியும்.

Post a Comment