GuidePedia

0


இந்தியாவில் ஓடும் ரயிலில் ஜேர்மனி பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனை சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் லூசி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).
கடந்தாண்டு இந்தியா வந்துள்ளார், ஜனவரி மாதம் 10ம் திகதி மங்களூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அதே ரயிலில் பயணம் செய்த பீகார் வாலிபர் சதன்குமார்(வயது 28) என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே பொலிசார் வழக்கு பதிவு செய்து சதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தனக்கு ஜாமீன் வழங்க கோரி சதன்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி நாகமுத்து தள்ளுபடி செய்துள்ளார்.
நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ரயிலில் பலாத்கார சம்பவமே நடைபெறவில்லை, ஏராளமான பயணிகள் இருக்கும் போது பலாத்காரம் என்பது சாத்தியமில்லை. இது பொய் வழக்கு என்று கூறியிருந்தார்.
ஒரு பெண் அதுவும் வெளி நாட்டைச் சேர்ந்தவர், தனது கற்புக்கு களங்கம் ஏற்படும் வகையில் பொய் புகார் கூறமாட்டார். எனவே இந்த சூழ்நிலையில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் அது புகார்தாரருக்கு குந்தகம் ஏற்படுமென தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top