GuidePedia

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய பளுதுாக்குதல் வீரர் ருபிந்தர் சிங்கிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
கடந்த 2011ல் கேப்டவுனின் நடந்த காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், +105 கி.கி., எடைப்பிரிவில் தங்கம் வென்றவர் இந்தியாவின் ருபிந்தர் சிங்.
கடந்த டிச., 5ல் தேசிய ஊக்கமருந்து சோதனை (டபிள்யு.ஏ.டி.ஏ.,) சார்பில் திடீரென பல்வேறு வீரர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில், ருபிந்தர் சிங் உட்பட 31 வீரர்கள் தடை செய்யப்பட்ட ‘அனபோலிக் ஸ்டெராய்டு’ என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனிடையே, ராஞ்சியில் நடந்த அகில இந்திய போலீஸ் போட்டியில் பங்கேற்ற ருபிந்தர் சிங்கிடம் மீண்டும் சோதனை நடந்தது. இதிலும் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரிந்தது. இது நிரூபிக்கப்படும் பட்சத்தில் ருபிந்தர் சிங்கிற்கு குறைந்தது 8 ஆண்டு முதல், வாழ்நாள் தடை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
 
Top