டில்லியில் நடக்கும் சர்வதேச சாலஞ்ச் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் வெற்றி பெற்றார்.
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், டில்லியில் சாலஞ்ச் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் 96வது இடத்திலுள்ள இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், 483 வது இடத்தில் இருக்கும் சகவீரர் கருணாதேய் சிங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை 6–2 என, வென்ற சோம்தேவ், அடுத்த செட்டினை 7–5 என, கைப்பற்றினார். ஒரு மணி நேரம், 28 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், சோம்தேவ் 6–2, 7–5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
பாம்ப்ரி ஏமாற்றம்:
மற்றொரு ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் இளம் வீரர் யூகி பாம்ப்ரி, பிரான்சின் லுகாசை சந்தித்தார். 2 மணி நேரம், 20 நிமிடம் போராடிய பாம்ப்ரி, முடிவில், 6–2, 5–7, 5–7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, இத்தாலியின் தாமஸ் பேபியானோவிடம் 6–7, 6–7 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தார்.