(ரீ.கே.றஹ்மத்துல்லா)
அம்பாறை, அட்டாளைச்சேனை கடற்கரைப் பிரதேசத்தில் வைக்கபட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடிப் படகும் அதனுள் இருந்த கரைவலையும் இனந்தெரியாதோரினால் இன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அதன் உரிமையாளர் தெரிவிக்கையில், வளைமையாக அட்டாளைச்சேனை கப்பலடியில் எனது கரைவலை மீன்பிடிப் படகும் அதற்கான வலைகளும் நிறுத்தப்பட்டு மீன்பிடியில் ஈடுபட்டுவருவது வழக்காமகும். இன்று பகல் 1.30 மணியளவில் எனது மீன்பிடிப் படகிலிருந்து புகை வெளியாகுவதாக சில மீனவர்கள் தெரிவித்ததை அடுத்து அங்கு சென்று பார்த்த போது இச்சம்பவம் பற்றி தெரியவந்ததுடன் அதனை நீர் ஊற்றி அனைக்கும் நடவடிக்கையினையும், நானும் அப்பிரதேச மீனவர்களும் மேற்கொண்டிருந்தோம் என்றார்.
இச்சம்பவம் ஒரு நாசகார, திட்டமிட்ட செயலாக இருக்கலாம் எனவும் இதனால் சுமார் ரூபா 12 இலட்சம் பெறுமதியான மீன்பிடிப் படகும், கரைவலையும் எரிந்து சேதமேற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment