GuidePedia

பவேஷ் ஷாஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி அட்வெண்டிஸ்ட் ஆஸ்பத்திரியில் இந்தியாவை சேர்ந்த பவேஷ் ஷா என்பவர் ஆண் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த 2009ம் ஆண்டு இந்த ஆஸ்பத்திரியில் இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக 79 வயது முதியவர் அனுமதிக்கப்பட்டார். அறையினுள் இருந்த நெஞ்சு வலி மாத்திரையை எடுத்துத் தரும்படி அந்த முதியவர், பவேஷ் ஷாவிடம் கேட்டுள்ளார். மாத்திரை டப்பாவுக்கு பதிலாக பாத்திரம் கழுவ பயன்படுத்தும் சோப் ஆயில் டப்பாவை அவர் எடுத்து தந்துள்ளார்.  இதனையடுத்து, நோயாளியிடம் கவனக் குறைவாக நடந்து கொண்டதற்காக ஆஸ்பத்திரி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்தது. நெஞ்சு வலி மாத்திரை டப்பாவுக்கும், டிஷ் வாஷ் டப்பாவுக்கும் உள்ள வேறுபாட்டை பவேஷ் ஷா உணராமல் போனதற்கு ஆங்கிலத்தில் போதிய பயிற்சி இல்லாமையே காரணம் என உணர்ந்த ஆஸ்பத்திரி நிர்வாகம், முறையான ஆங்கில பயிற்சி பெற்ற பின்னர், மீண்டும் வேலையில் வந்து சேரலாம் என கூறியது. ஆனால், 3 ஆண்டுகளை கடந்த பின்னரும், 6 முறை நேர்காணல் செய்தபோதும் அவரது ஆங்கில அறிவில் எந்த முன்னேற்றமும் காணப்படாததால் கடந்த வாரம் அவரை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்த ஆஸ்பத்திரி நிர்வாகம், மேலும் ஓராண்டுக்கு அவர் வேறு எங்கும் பணியாற்ற கூடாது என தடையும் விதித்துள்ளது
 
Top