GuidePedia

ஜூலியா கில்லார்ட்ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தொழிற் கட்சியின் தலைவர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மூத்த மந்திரி ஒருவர் ஜூலியா கில்லார்ட்டிடம் தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ஜூலியா கில்லார்ட் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இந்த தேர்தல் இன்று மதியத்திற்கு மேல் நடைபெறுகிறது. மந்திரி சிமோன் கிரியன் இது குறித்து கூறுகையில், நான் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்றும் முன்னாள் பிரதமர் கேவின் ரூத் தலைவர் பதவிக்காக போட்டியிடுகிறார் என்றும் கூறியுள்ளார்
 
Top