ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து வரும் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட பொதுஜனவாக்கெடுப்பை போன்று நோர்வேயில் பொதுஜனவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நோர்வேயின் ஆளும் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
குடியேற்ற சட்டங்களில் சுவிட்சர்லாந்தின் நடவடிக்கைகளை நோர்வே பின்பற்ற வேண்டும் என குடியேற்றவாசிகளுக்கு எதிரான கட்சியின் பேச்சாளர் மஸ்யர் ஹெஷ்வாரி நோர்வே பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
நோர்வேயில் பொதுஜனவாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பெரும்பான்மை ஆதரவை பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தை போல நோர்வேயும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

