GuidePedia

0
மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை கொழும்பில்

இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 10ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

சென்னை மீனவர் சங்கத்தின் 20 பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள உள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு பகுதி மீனவ சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பல பிரதிநிதிகள் இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்திய மற்றும் இலங்கை மீனவ பிரதிநிதிகள் கண்காணிப்பு மட்டத்திலேயே இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.

ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top