அக்கரப்பத்தனை பிரதேசத்தில்3 பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்றாசிதோட்ட ஆற்றில் இன்று பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
3 பிள்ளைகளின் தாயான அண்ணாமலை லோகநாயகி என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சடலம் தற்போது நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவர் உடைகளை கழுவுவதற்காக ஆற்றில் இறங்கிய பொழுது வழுக்கி விழுந்த நிலையில் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கும் அக்கரப்பத்தனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment