GuidePedia

0
இலங்கைக்கு அழுத்தம் விடுக்கும் வகையில் ஏன் செயற்பட வேண்டும்?… பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கேள்வி

யுத்த குற்றங்கள் தொடர்பில் நம்பிக்கை மிகு விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மார்ச் மாதம் வரை இலங்கைக்கு அவகாசம் வழங்க முடியும் என பிரித்தானியப் பிரதமர் அண்மையில் கூறியிருந்தார்.

இந்தப் பின்புலத்தில், அந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அழுத்தம் விடுக்கும் வகையில் பிரித்தானிய அரசாங்கம் ஏன்  செயற்படுகின்றது என நேற்று அந்த நாட்டு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்போது, அந்நாட்டுத் தொழிலாளர் கட்சியின் போல்க்ஸ் ஓப் கம்னக்  தெரிவித்ததாவது;

இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் அமைச்சர் கூறிய கருத்துக்களை நான் வரவேற்கின்றேன். அதன்படி அடுத்து பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் இறுதியில், முதலாவது உலகமகா யுத்தத்தின் ஆரம்பத்தை நினைவுபடுத்தும் க்லோஸ்கோச்சில் நடைபெறும் வைபவத்திற்கு இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுப்பது அவ்வளவு புதுமையான விடயம் அல்ல.  அந்த அழைப்பை மீண்டும் சிந்தித்துப் பார்ப்பது புத்திசாதுரியம் மிக்கது அல்லவா? ஸ்கொட்லாந்தின் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தற்போதும் இதனை வினவுகின்றனர்

கன்சர்வேட்டிவ் கட்சியின் பரோனஸ் வர்ஸி தெரிவித்ததாவது;

மிதிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்ற விவகாரங்களில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.  இவற்றை சரியான முறையில் முன்னோக்கி கொண்டு செல்வதில் அரசாங்கம் முழுமையாக விலகியுள்ளதாக நான் நினைக்கவில்லை.  அந்த அழைப்பு தொடர்பில் எனக்குத் தெரியாது. செயற்திறன்மிகு செயற்பாடுகள் முன்னோக்கி செல்வதற்கு சிறந்த பாதையாக அமையும்

Post a Comment

 
Top