GuidePedia

0
ஜனாதிபதியின் வாழ்க்கைத் திறனாக ஆங்கிலம்" என்ற திட்டத்தின் ஆங்கிலம் பேசும் பாடசாலை திட்ட ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
 
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் குழு அறை பி"யில் மாலை 3 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் சுனிமல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக ஜனாதிபதியின் ஆலோசகர் சுனிமல் பெர்னாண்டோ மேலும் தகவல் தருகையில்,
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், விசேட அதிதியாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் விசேட பிரதிநிதி கீத் டேவின் ஆகியோரும் கலந்துகொள்ளகின்றனர்.
 
அத்தோடு இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளிலிருந்து 350 அதிபர்களும், மொறட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் மற்றும் பிரின்ஸல் கல்லூரி, ஹோமாகம மஹிந்த ராஜபக் ஷ கல்லூரியின் மாணவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

 
Top