GuidePedia

0
திருக்கோவில் குடிநிலப் பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுவன் ஒருவனின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்திய 55 வயதுடைய ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டார்.
 
குடிநிப் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் பாலர் பாடசாலைக்குச் சென்று வந்து தனிமையில் இருந்த மூன்றரை வயது சிறுவனை அதேபிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் சிறுவனை வீட்டுக்குள் கொண்டு சென்று மேசை மீது ஏற்றிவைத்து அவனின் அந்தரங்க உறுப்பை கடித்துள்ளார்.
 
 இதனையடுத்து சிறுவன் எழுப்பிய சத்தத்தையடுத்து அவர் சிறுவனை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தப்பியோடியவரை கைது செய்ததுடன் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

Post a Comment

 
Top