GuidePedia




முகத்தை மூடிய தலைக்கவசத்தை அணிந்து மோட்டார் சைக்களில் வந்தவர்களால் சுமார் 20 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தங்கம் மற்றும் பணம் என்பவை நீர்கொழும்பு பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து மீண்டும் முகத்தை மூடிய தலைகவசத்துக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

ஏற்கனவே இந்த நடைமுறை தளர்த்தப்பட்ட போதும் தற்போது அதனை அமுல்செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகத்தை மூடிய தலைகவத்தை அணியக்கூடாது என்று பல நாடுகள் தடை விதித்துள்ளன.

இந்தநிலையில் இதன்காரணமாக தலைகவச வர்த்தகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

சிசிடிவி கமராக்களை பொருத்தினாலும் முகத்தை மூடிய தலைக்கவசத்தை அணிந்து செல்பவர்களின் அடையாளங்களை அவற்றால் காணமுடியாது என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
Top