அதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தை வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் களமிறங்கும் அணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமத்துவ மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளன.
இந்த கட்சிகளுடன் அதிமுக தொகுதி பங்கீடு குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் ஒ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனிசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இக்குழுவினர், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளுடன் ஏற்கனவே 2 முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டில் இரு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அறிவிப்புகள் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் கடைசி கட்ட பேச்சுவார் த்தை வரும் 22ம் தேதி போயஸ் கார்டனில் நடைபெற உள்ளது. அப்போது, தொகுதி பங்கீடு குறித்த முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.அதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தை வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் களமிறங்கும் அணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமத்துவ மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளன.
இந்த கட்சிகளுடன் அதிமுக தொகுதி பங்கீடு குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் ஒ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனிசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இக்குழுவினர், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளுடன் ஏற்கனவே 2 முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டில் இரு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அறிவிப்புகள் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் கடைசி கட்ட பேச்சுவார் த்தை வரும் 22ம் தேதி போயஸ் கார்டனில் நடைபெற உள்ளது. அப்போது, தொகுதி பங்கீடு குறித்த முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.