GuidePedia

உலக கோப்பை மல்யுத்த போட்டியில் இருந்து சுஷில் குமார், யோகேஷ்வர் தத்துக்கு ஓய்வு தரப்பட்டது.
அமெரிக்காவில் உலக கோப்பை ‘பிரீஸ்டைல்’ மல்யுத்த போட்டி வரும் மார்ச் 15, 16ல் நடக்கிறது.
இதில் பங்கேற்பதில் இருந்து லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சுஷில் குமார், வெண்கலம் கைப்பற்றிய யோகேஷ்வர் தத்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற அமித் குமார் தாகியா, 7 வீரர்கள் கொண்ட இந்திய அணிக்கு தலைமை ஏற்கிறார்.

இதுகுறித்து சுஷில் குமார் கூறுகையில்,‘‘ கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து) காமன்வெல்த் போட்டிக்கு (வரும் ஜூலை 23 முதல் ஆக., 3 வரை) தயாராக வேண்டும். இதற்கான பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டியதுள்ளது. இதனால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், உலக கோப்பை போட்டியில் எங்களுக்கு ஓய்வு தந்தனர்,’’ என்றார்.
 
Top