கூகுள் நிறுவனமானது பயன்பாட்டாளரை சூழவுள்ளவற்றின் முப்பரிமாண வடைபடங்களை
உருவாக்கக் கூடிய மென்பொருள்களையும் வன்பொருள்களையும் கொண்ட ஸ்மார்ட்
கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.
அந்த கையடக்கத் தொலைபேசியிலுள்ள உணர்கருவிகள் ஒவ்வொரு செக்கனிலும்
அதிருக்கும் நிலையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் 250,000 க்கு மேற்பட்ட
முப்பரிமாண அளவீடுகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது.
பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன்
மேற்கொள்ளப்பட்ட தங்கோ திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த கையடக்கத் தொலைபேசி
விருத்தி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment